அடை மழை

அடை மழை !!!

புலர்ந்த காலை அழகை கண்டு கண்கள் மலர்ந்தனவே
படர்ந்த வெய்யில் பட்டதும் பறவைகள் சட்டென பறந்தனவே

உதிர்ந்த இலைகள் காற்றிடை மிதந்து பறந்து திரிந்தனவே
குளிர்ந்த ஓடையில் கயல் விளையாடி குலாவி மகிழ்ந்தனவே

மலர்ந்த மலர்கள் வண்டின் இசைக்கென தேனை சொறிந்தனவே
சுறந்த பாலை தாயிடம் முட்டியே கன்றுகள் குடித்தனவே

நிறைந்த காலை அழகினை கண்கள் விரிந்து ரசித்தனவே
விரைந்து மாறிய நிலையால் மரங்கள் அமைதி காத்தனவே

பறந்த பறவைகள் இருப்பிடம் சென்று பொறுப்புடன் அமர்ந்தனவே
நிறைந்த மழையை தருவதாய் முகில்கள் கதிரை மறைத்தனவே

குளிர்ந்த காற்றின் காரணம் தொட்டு ரோம கால்கள் சிலிர்த்தனவே
வெளிர்ந்த ஒளியும் மங்கியே மெல்ல காட்சிகள் மங்கினவே

திரிந்த மக்கள் கூட்டமும் இறுதியாய் நிலையை உணர்ந்தனவே
செறிந்த அறிவுடன் விலங்கினை பறவையை கண்டு வியந்தனவே

எறிந்த மண்ணின் தணியா தாகம் மெல்ல தணிந்ததுவே
விரைந்த மழையில் நனைந்த மண்ணில் நத்தைகள் ஊரினவே

தெளிந்த நீரிணை தன்னுள் நிரப்பி திரும்பி விரைந்தனவே
பொழிந்த மழையில் எழுந்த வெள்ளம் எங்கும் நிரைந்தனவே

நிறைந்த மனதுடன் மறவர் நெஞ்சம் நன்றி பகன்றனவே

----அருள் ஸ்ரீ--

எழுதியவர் : ARULSHRI (16-May-14, 10:22 pm)
Tanglish : ATAI mazhai
பார்வை : 812

மேலே