கல்லணைக்கோர் பயணம்35
கல்லணைக்கோர் பயணம்..35
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
வெயில் பாதங்களின்
மென்மை தன்மையை
சோதித்து பார்க்க
பொடி தாளாமல்
துடித்தோம் குதித்தோம்
சாலையோர புற்கள்
அடைக்கலம் தந்தன
அழகிய பாதங்களுக்கு
குளிச்சியை உள்ளங்கால்
தான்மட்டும் கொள்ளாமல்
உஞ்சந்தலை வரை
பாகுபாடின்றி பரப்பியது
சிலிர்ப்பூட்டும் உணர்வுடன்
கால்கள் தாவித்தாவி
முத்தமிட்டு மகிழ்ந்தன
சாலையோர புற்களை..
கல்லணை எப்பவரும்
எதிர்பார்ப்புகள் நெஞ்சுக்குள்,
அஞ்சுதலை பாம்பு
சிலையை பார்க்க
ஆவல்கொண்டது மனம்,
ஓடிய களைப்பில்
உட்கார்ந்தோம் பாலகட்டையில்
தொங்கவிட்ட கால்கள்
தொட்டு தொட்டு
மகிழ்ந்தன தண்ணீரை..
காவிரியில் பிறந்த
கால்வாயின் நீரில்
பாதங்கள் மட்டும்
குளித்து மகிழ்ந்தன
பரவச துள்ளலுடன்
மென் பாதங்களை
மீன்கள் சீண்டி
விளையாடி மகிழ்ந்தன
திடீர் சீண்டலால்
திகைப்பின் உச்சியில்
பாதங்கள் உதற
மீன்கள் பதற
விளையாட்டை தொடர்ந்தன
பாதங்களும் மீன்களுமாய்..
நீரின் தலையை
பாதங்கள் வருட
பயணத்தை தொடர்ந்தது
வாய்க்கால் அலையலையாய்
புன்னகையை சிந்தியவாறே..
தட்டையான இலையை
மெல்ல பறித்து
நீர்த்திரளின் சொட்டினை
இலையின் மேலேற்றி
உல்லாச பயணம்
அனுப்பி வைத்தோம்
சொட்டு நீரினை
இலைப் படகில்
வாய்க்காலின் வேகத்தில்
ஆனந்தமாய் சென்றதை
அணுவணுவாய் ரசித்தோம்..
(பயணிப்போம்...35)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
