காதல் வெண்பாக்கள்
கயலாய் விழியாடும் ;கொஞ்சிக் குலவ
வயலாடு தென்றல் தழுவும்; - புயலாய்
இளமேனி பந்தாட என்னுள் சிலிர்த்தேன் !
கிளர்ந்தது காதலும் காண் .
இடையில் சரிந்த புடவையில் அன்ன
நடையினில் என்னுள் நலிந்தேன் - சடையிலோ
வாடுமாம் பூச்சரம் ! வாய்ரசத்தைத் தேடியே
ஓடுமாம் என்மனத்தை ஒத்து !!
.
மதுவுண்ட வண்டாய் மயங்கிய நெஞ்சம்
புதுமை விளங்கிடப் பொங்கும் - குதுகலத்தில்
பெட்டகத்து மாதுளையின் முத்தாய்ச் சிவக்குமே
வெட்கத்திம் மாதின் முகம் .
(மரபு மாமணி ஐயா அவர்கள் திருத்தி
முழுமை அடைந்த வெண்பாக்கள் )