காதல் பிடிப்பதில்லை
காதலை எழுதி
தேய்ந்த விரல்கள்
இப்போது....ஏனோ காதலை
எழுத மறுக்கிறது
காதல் என்பது ஓர் உணர்வு
மனித மனமோ
பற்பல உணர்வின் கிடங்கு!
காதல் பிம்பம்
என் கவிதைக்கு
கட்புலனாகா தூரத்திற்கு
சென்று கொண்டிருக்கிறது.
பதியப்பட உணர்வு
பல நூறு இருக்க
காதலை மட்டும்
பூசனை செய்ய
என் ஆறாம் அறிவு
மறுக்கிறது
காதலை பிரதானப்படுத்த
என் பேனாவும் விரல்களும்
ஒத்துழையாமை செய்கிறது.
காட்சியின் பிழையில்
காமத்தின் இழையில்
காதலின் உணர்வு
சிக்குண்டு கிடக்கிறது
சாடப்பட வேண்டிய
சமூக அவலம்
மாற்றப்பட வேண்டிய
மூடத்தனனம் யாவும்
மண்மூட வேண்டாமா?
கோலெடுத்து
கவி தொடுத்து
கவிதை வழி
கருத்து கூறி
சமூக அவலத்தை
மடமைகளின் சாபத்தை
விமோசிக்க வேண்டாமா?
காதலை சற்றே
பின்னுக்குத் தள்ளி
சமூகத்தை
முன்னெடுப்போம்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
