சாலையோர சங்கீதங்கள்
நடைபாதையில் நெடுநேரமாய்,
கால்கடுக்க நிற்கும் பாட்டுடை கலைஞனே..!
இருண்ட கண்ணுனது பார்வையில் தெரியாது,
அறிவுக்கண்ணனிடத்தில் மட்டுமே தெரியும்,
நேர்வழி கோட்டில் செல்லும் ராகமும் தாளமும்,
மாறாது தடமமைக்கும்,
உனது மெல்லிசை கானங்களினால்,
வெறுந்தரையில் விழுமொவ்வொரு,
சில்லறை காசுகளும் உமக்கு சாலையோர சங்கீதங்களே..!