தந்தை

தாயின் கருவறையில் சதை பிண்டமாக

இருந்த எனக்கு உயிர் ஊட்டிய தந்தையே

அதனால் தான் என்னால் படைக்க முடிந்தது

ஆயிரம் ஆயிரம் விந்தையே

பொக்கிஷமாய் விளங்கும் அறிவு சந்தையே

தாயின் தாய் பால் தேவாமிர்தம்

தந்தையின் அரவணைப்பால் பெற்றோம்
சாகாவரம்

தந்தை என்றால் கண்டிப்பு

அது கலையோடு செய்யும் கண்துடைப்பு

கண்ணை கக்கும் இமையாக

சேயை காக்கும் சேவகன் ஆக

நம் கருத்தை இசைக்கும் நல்ல யாழாக

நம்மை காக்கும் காவலனாக

நல்ல கருத்தோடு இருக்கும் கலைஞனாக

ஏன் உயிரிலும் உணர்விலும் நீங்கா இடம்

பிடித்திருக்கும் என் அன்பு அப்பாவுக்கு

சமர்ப்பணம்

எழுதியவர் : (18-May-14, 6:32 pm)
சேர்த்தது : KESHAWARDHNI
Tanglish : thanthai
பார்வை : 51

மேலே