உன் அழகிய பெயர்
இரவு தூக்கத்தில்கூட
என்னை அறியாமல்
என் உதடுகள் உச்சரிக்குதடி உன் பெயரை ...
கணினி கணக்குகளின்
கடவுச்சொல்லாக
என் கைகள் தட்டுதடி உன் பெயரை ...
அம்மன் கோவிலில்
அர்ச்சனை செய்து
என் மனம் உருகி வேண்டுதடி உன் பெயரை ..
படிக்கும் புத்தகத்தில்
ஆங்காங்கே
என் பேனா கிறுக்குதடி உன் பெயரை ...
வண்டி கண்ணாடியில்
உள்ள தூசியில்
என் நகங்கள் வட்டமடிக்குதடி உன் பெயரை ...
கடற்கரையில்
அமர்ந்திருக்கையில்
என் விரல்கள் மண்ணில் பொறிக்குதடி உன்
பெயரை ...
குளியலறை
கோப்பை தண்ணீரில்
தினம் தீட்டி பார்க்கிறேனடி உன் பெயரை ...
பரீட்சை தாளில்
எடுத்துக்காட்டுக்கு எல்லாம்
எழுதி வைத்தேனடி உன் பெயரை...
உன்னை நினைக்கும்போதெல்லாம்
கண்கள் ஏங்கிப் பார்க்கும்
என் கைபேசியில் பதிவு செய்யப்பட்ட உன்
பெயரை ...
அக்கா குழந்தைக்கு
பெயர் சூட்டச் சொன்னார்கள்
அழகாய் தேர்வு செய்தேன் உன் பெயரை ...
ஒரு நாள்
என் காதலை
உனக்கு உணர்த்தியதும்
உன் பெயர்தான் ...
என் நெஞ்சில்
பச்சை குத்தலாக ...