கிராமத்து வாடை லிமரைக்கூ

*
கருமலையோ மிக உயரம்
அழகுப்படுத்துகிறது நெட்டையான
ஒற்றை பனைமரம்.
*
பேச்சில் கிராமத்து வாடை
வியாபாரம் செய்ய வந்தவள்
தலையில் தயிர் கூடை.

யாரோ ஏற்படுத்திய சினம்
பொறுத்தக் கொண்டான். எப்படியோ?
அமைதியடைந்தது மனம்.
*
ஒவ்வொரு மனிதனும் ஒரு ரகம்
ருசியாய் விரும்பிக் கடித்துச் சிலர்
சாப்பிடுவதோ விரல் நகம்.
*
நடப்பதற்கு ஏனிந்தச் சிக்கல்
காலை உறுத்தியது
காலணிக்குள் சிக்கிய சிறுகல்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (20-May-14, 11:54 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 207

மேலே