என் அருமை காதலியே

ஆலமரத்து தேவதையே
ஆடிவரும் தேர் நீயே !
வஞ்சையற்ற வனப்பினாலே
வந்து குலுங்கும் பூச்சரமே !

அழகாய் பிறந்ததினால்
ஆலமரப் பஞ்சாயத்து கலைந்ததடி!
ஆண்களெல்லாம் உன்னழகில் மயங்கிடவே
மமதை கொண்டு நீ நடந்தாய் !!

சிறுசுமுதல்பெருசுவரை-உன்
சிரிப்பினில் மயக்கமுற
நானும் உனை பின்தொடர
திரும்பிடாமல் சென்றவளே !

அழகுகண்ட மேனியை
ஆயிரம்முறை நீ ரசித்து
மேனிகொண்ட வனப்பால்
நீ குடித்தாய் மனப்பால் !!

நீரோடை அழகினிலே
நானோடி வந்திடவே
நாணம் கொள்ளா உன்நினைவு கண்டு
நானொடிந்து போனேனடி...!

பேரழகியாய் நீ நினைத்து
அசிங்கமென எனை வெறுத்தாய் !
கசங்கிவிடும் மலரே...
கடவுள் தந்த உருவிதுவே!

அரிதாரம் பூசி
கண்மையை தீட்டி
உதட்டுசாயம் பூசி
பூசிக்கும் அழகே !

உனை சுவாசிக்கும் எனை
யாசகன் என்கின்றாய் !
காலங்கள் கடந்தாலும்
உன்காதலால் நான் காத்திருப்பேன் !

இளமைக்கும் முதுமைக்கும்
இடைப்பட்ட தூரம்
இனிமையென களிக்கின்றாய்!
இருவிழி குழிவிழும் அதுவரை காத்திருப்பேன்

அன்பு காதல்!!
அழகு காமம்!!
அறியாத உலகிலே
அழகை வளர்க்கிறாய்...

முக அழகில் மயங்கவில்லை
முன்ஜென்ம ஈர்பாலே
முன்வந்து உரைத்தேன் காதல்
பின் தள்ளி போனவளே...

பெருமையென எண்ணாதே
பெண்மையென்பதை மறவாதே
நாற்பது வயதிலும் என்முகம் மாறாது
உன்னிலை காணத்தான் காத்திருக்கிறேன்

இயற்கை தவிர வற்றாத அழகு வேறேது?
நினைப்போடு இருக்கின்றேன்-உன்
அழகியமுகத்தை மனதில் புதைக்கின்றேன்!
வரும் காலம் கனியட்டும்
நம் காதல் நாற்பதிலாவது மலரட்டும்... !!

அன்புடன்
ஆசை காதலன்

எழுதியவர் : கனகரத்தினம் (20-May-14, 5:44 pm)
பார்வை : 116

மேலே