தாகம் தீர்க்க வா-வித்யா
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கான கூண்டுக்குள்
சுதந்திரமாய் சுற்றித்திரிந்தேன்
கூண்டுகள் சிறைகளென
காதல் உலகிற்குள்
கடத்திச்சென்றாய்.....!
அதுவாக,இதுவாக,எதுவாக
நீயிருந்தாய் எனக்கு......
என் உணர்வுகள்
விரல்வழி வழிந்தோடி
வார்த்தைகளென உயிர்ஜனித்து
உன் காதல் வனத்தில்
நடைபோட்டது........!
காதலுக்கு விதிவிலக்காய்
ஒளி,ஒலி அறியாமல்
விதியறிந்து வழிவிட்டேன்......!
ஒருநாளும் உன் விழி பார்த்ததில்லை
உன் குரல் கேட்டதில்லை.....
நான் காதலிக்கிறேனென்றால்
உலகம் எனை என்ன சொல்லும்....?
மிட்டாய் கூட
எனக்கு பிடிக்கும் என்று
கேட்கும் தைரியம் இல்லாதவள் நான்.....!
எந்த தைரியத்தில்
நீ வேண்டுமென்று கேட்டேன்
இன்று...ஆம் கண்ணியமாக
காதலிக்கும் ஆணவத்தில்.......!
நான் உன் வாழ்வின்
வசந்தமா.......?
உன்னில்
பாதியா...........?
உனக்கான
அழகியா.........?
காதலால்
ஆனவளா.......?
அதனினும் மேலான
என் தந்தையின் அணு சுமந்த
என் தாயின் கருவில் பிறந்தவள்........!
என் கண்ணீரை
துளித்துளியாக குடித்து
உயிர்வாழ்கிறேன்..........
தாகம் தீர்க்க நீ வா........!