வாழ்வின் மறுவாசல்
கண்களின் ஒளியை பறித்தாய் இறைவா
இவன் குரலில் உயிரை வைப்பதற்கா?
பெற்றவர்களே உதறிவிடனர்- இறைவா
இவனை தாங்க எம்போன்றவர் கரம் கொடுக்கவா!
இவனைக்கண்டதும் நீர்சொரியும் என் கண்கள்
அவனைக் காணும்போது ஓய்வின்றி அழுகின்றன
தெளிவான முகத்தின் கண்களை பறித்துக்கொண்டாய்
இசை வெள்ளத்தில் தத்தளிக்கும் தோணியாக்கினாய்
வீணையிசைக்கும் வாணி அவன் குரலில் வடிவோ!
இல்லை அவளே இவனிடம் அடைக்கலம் புகுந்தாளோ!
இன்று இசையெனும் கதவினைத் திறந்தாய் – அவனுக்கென்று
புதுவுலகம் காத்துக்கொண்டிருக்கின்றது..
காண்போர் அனைவரையும் கண்கலங்க வைக்கின்றாய்
அதனை காணவோ உணரவோ அவனால் முடியவில்லை
அவன் தரும் இசை என்றும் இனிக்கின்றது எனது காதுகளில்
ஓயாத ஓலத்துடன் என்னுள்ளே அழுகின்றேன்..
கல்நெஞ்சை கரையவைத்தாய் அதற்கு இசையே சாட்சி
இப்படியும் ஓர் வாழ்க்கையிருக்கின்றது
வாழ்விற்கும் ஓர் அர்த்தம் இருக்கின்றது - உணர்ந்தே
என் வாழ்வின் அர்த்தத்தினைத் தேடுகின்றேன்..