வெள்ளைத் தாளோடு முடிந்த வாழ்க்கை

வெள்ளை காகிதத்தில்...
உன் பெயரும்
என் பெயரும்
சலனமின்றி சங்கமிக்க...

மூளையின் மடிப்புகளுக்குள்...
கருத்தரித்து ஈன்றெடுத்தேன்
கண்ணீரோடும் புன்னகையோடும்
ஆணொன்றும் பெண்ணொன்றுமாய்
நம்மிரு பிள்ளைகளை
பேனாவின் துணைகொண்டு...

பத்து திங்கள் சுமக்கவில்லை
பத்தியமும் இருக்கவில்லை
பிரசவ வலியோ மனதோடு
பிறந்த உடலோ(எழுத்துக்கள்) தாளோடு
கண்கள் இரண்டும் வலியோடு
காகிதத்தில் தவழும் பிள்ளைகளை விரலோடு
வாரியெடுத்து குறுஞ்செய்தியில் அனுப்பினேன்
ஏக்கத்தோடு....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (21-May-14, 11:58 pm)
பார்வை : 108

மேலே