தோற்றுகொண்டே இருக்கிறேன்
என்னவனே
அயராமல் உன் நிழலையே தேடும் விழிகள்...
உதிரும் உன்சொல்லுக்கு தவமிருக்கும் செவிகள்...
வஞ்சிக்கபட்டதை உணர்ந்தும் உன்வாசம் தேடும்நாசி...
நித்தமும் உன்பெயரை பெற்றெடுக்கும் இதழ்கள்...
சுவாசிக்கிறதோ இல்லையோ
உன்னை எண்ணி துடித்துக்கொன்டே வாழும்இதயம்...
மறப்பேன் மறப்பேன் என
மதியிழந்து உன்னையே உருப்போடும் மூளை...
தென்றலின் தழுவலையும்
உன்னதாய் உணர்ந்து சிலிர்க்கும் என்மேனி....
இப்படி இருபது வருடம்
எனக்காய் இயங்கிய அனைத்தும்
எனக்கெதிராய் சத்தியாக்கிரகம் செய்ய
தோற்றுக்கொன்டே இருக்கிறேன்
உன்னை மறக்கும் முயற்சியில்.....