அன்பும் காதலும்
சொல்லாமல் அறிவது அன்பு....!
சொல்லி தெரிவது காதல்
செயற்கை இல்லை இரண்டிலும்
செயல்கள் ஒன்று தான்
உணர்வில் மட்டும் கொஞ்சம்
மாறுபாடு தான்
அன்பு கொண்ட மனங்கள்
இரண்டு அள்ளி கொஞ்சுமே
அது தாய், சேயாகவும்,
இருக்க கூடுமே
தமக்கை, தனயனாகவும்
இருக்க கூடுமே
காதல் கொண்ட இருவர்
பிணைந்திருப்பாரே
அது ஆண், பெண்ணாக
தான் இருக்க முடியுமே
காதலில் அன்பு நிச்சயம்
வேண்டுமே
அன்பு, காதல் இல்லாமலும்
சிறக்குமே
அன்பும், காதலும் இரண்டும்
அற்புத கவிதை தான்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்
ணர்வுகள் இவை இரண்டும் தான்