இப்படியும் ஒரு காதல் வேண்டுமா
சொல்ல வந்த வார்த்தைகள்
நெஞ்சுக்குள்ளே சிக்கி கொண்டதே
மனதில் வடித்து வைத்த அழகிய
கவி வரிகள் எனக்குள்ளே
தொலைந்து விட்டதே
சொத்தும், சுகமும் அந்நிலையில்
எனக்கு சொற்கள் மட்டுமே
அந்த சொற்கள் என்னை கை
விட்டால், நான் என்ன செய்வதோ?
நெஞ்சத்தின் உறுதி கொஞ்சம்
குலைந்து, மனம் திகைத்து நின்றதே
நேர் பார்வை கோணலாகி திசை
தடுமாறி கீழ் திரும்பியதே
கால் நடுங்கி உடல் அசைந்து
என்னை அவளிடம் காட்டி கொடுத்ததே
பாவை அவள் கண்ணின் காந்தங்கள்
என்னை ஊடுவுறியதே
காதல் உணர்வு வந்து விட்டால்
இத்தனை போராட்டமா?
கம்பீரமெல்லாம் கலைந்து, கண்
பார்வைகள் தடுமாறி, முகம் வேர்க்குமா?
காட்சியெல்லாம் தலை கீழாகி, காணும் பொருளெல்லாம் எள்ளி நகையாடுமா?
அப்படியும் காதல் செய்ய வேண்டுமா?
இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா?
காளையரே கொஞ்சம் கவனத்தில்
கொள்ளுங்கள், கண் பார்வையை
வெல்லுங்கள்
சடுதியில் விழுந்து, சங்கடத்தில் சிக்கி
நீர் தடுமாறிட வேண்டுமா?
சந்தன மேனியும், சுந்தர பார்வையும்
இணைந்து தாக்கினால் என்ன? விழித்து கொள்ளுங்கள்
சாதிக்க பிறந்தவர் நாம், சோதனைக்கு
நம்மை நாமே ஆளாக்கிட வேண்டுமா?