இழந்த சுதந்திரம்
அழுதால் அணைப்பதற்கு - ஒரு
---ஆயிரம் பேர் வந்தனரே !
அழுகை வருமுன்னே அதைத்
---துடைதிடக் கை விரைய
அழுவதற்கும் இல்லை அய்யா
---உண்மையான சுதந்திரம் தான் !
அழகான பெண்ணைப் பார்த்தால்
---பார்த்தவுடன் நீங்கள் ரொம்ப
அழகாக உள்ளீர் என்றேன்
---அணைத்து அவளும் முத்தமிட்டாள் !
இந்நாளில் அதையே செய்தால்
---செருப்பாலே அடிப்பேன் என்று
சொன்னாலே ! என்ன செய்ய
---இழந்தேனே ரசிக்கும் சுதந்திரம் !
தாயாரின் மடி மீதில்
---தாராள மாய் அமர்ந்து
ஓயாமல் விலை யாடினேன்
---ஒருநாளும் அதைமறந்த தில்லை
இன்றைக்கோ அதனைச் செய்ய
---இயலவில்லை ஐயோ என்னால்
அன்னையவள் மடிமீ தமரும்
---சுதந்திரம் இழந்தேன் நானே !
தந்தையவள் காலின் மேலே
---ஏறிநின்று நடைபயின் றேன்
சந்தோசம் அடைந்தேன் அன்று
---நானோ இளம்பசுங் கன்று !
இப்போதோ தந்தையை நான்
---இடுப்பொடிந்து படுக்கையில் காண
அப்பாவென்று அழைக்கக் கூட
---அழிந்ததே உண்மை சுதந்திரம் !
வயல் பார்க்கும் சுதந்திரம்
---வாய்ப்பின்றி இழந்தேன் நான்
கயலாடும் நீரை எண்ணெயிலாமல்
--காணவும் சுதந்திரம் இல்லை !
இழந்த சுதந்திரம் பலவுண்டு - இதில்
எப்படிச் சொல்வேன் சுதந்திரம் பெற்றேனென்று !
-விவேக்பாரதி