செரிக்கப்பட்ட மனிதாபிமானம்
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே -
பணம் தேடும் பயணத்தில்
மனிதாபிமானம் மறந்துபோய்விட்டது ......
விடிந்திருந்தும் மனித உறவுகள்
இருட்டுக்குள்ளேதான் வாழ்கிறது
மனிதன் என்கிற வார்த்தை
வெறும் வார்த்தையாகத்தான் போய்விட்டது .....
தேடிக்கொண்டிருக்கிறான் மனிதன் மனிதனை
ஆனால் கிடைத்தபாடில்லை
எதிர்பார்ப்புகளை எவேர்மீதோ வைத்தவன்
தன்னை மனிதக்குவதில் தோற்று போய்விட்டான்
சுயநல தேடலில்
சூழ்ச்சி நாடகத்தில்
மனிதம் தோற்றுப்போய்
மனிதாபிமானம் செரிக்கப்படுவிட்டது ......
விதவிதமான் தண்டனைகளை
மனிதனே மனிதனுக்கு அளிக்கிறான்
கருணையின் அர்த்தத்தை
காலம் மறந்துவிட்டது ............
எதச்சையாய் கிடைக்கவேண்டிய
அன்பும் கருணையும் இரக்கமும்
பணவாசத்தால் பலியாகிவிட்டது -
புலம்பல்கூட புலம்பிக்கொண்டிருக்கிறது ........
அர்த்தமற்ற சுதந்திரத்தால்
அன்னையும் தந்தையும் அநாதை இல்லத்தில்
அண்ணன்தம்பி உறவுகள்
ஆசையின் பக்கத்தில் .......
வேதாந்தவாதிகளின் வேதவாக்குகள்
வெறும் காகித குப்பைகலாகிவிட்டன
நடைமுறையில் நாளுக்கு நாள்
துளிர்விட்டுக்கொண்டிருக்கின்றன துரோகம் .....
காதலை முந்தி
காமம் பசியாருகிறது
அநாதை ஊர்வலம்
அன்றாடம் கூடுகிறது .......
மனிதன் மனிதனின் மேல்காட்டும் இறக்கம்
மனிதாபிமானம் -
இன்று நீ யாரோ நான் யாரோ என்று
அவரவர் பயணத்தில் அவரவர் .....
இப்படியே நீளுமானால்
ஓர்நாள் மனித உறவுகள் -
மனிதாபிமானத்தை மளிகைக்கடையில் கிலோ எவ்வளவு என கேட்டாலும் ஆச்சரியமில்லை ....