தங்கம் என் பெயர் தங்கம்

..."" தங்கம் என் பெயர் தங்கம் ""...
{தங்கத்தின் மாற்று சிந்தனையோடு }
பாதுகாப்பாய் மறைந்திருந்த எனை
பத்திரமாய் பாதுகாத்து மறைக்கும்
என்மீது தீராத ஆசையுள்ளவர்களே
தெரியுமா உங்களுக்கு என் பிறப்பு
இந்த பூமியை குடைந்ததும் நான்
குதித்துக்கொண்டு வருவதில்லை
பலநூறு ஆண்டுகள் மண்ணுக்குள்
புதைந்து பொறுமைதனை காத்ததால்
எனக்கு இந்த பெருமைகிடைத்தது
வெட்டியெடுத்து எனை தட்டிப்பிரித்து
சிறு சிறு துகள்களின் கூட்டமைப்பில்
ஒன்றுகூடி நானிங்கு சொலிக்கின்றேன்
தரத்தோடு தரம் சேர்த்து தரணியாளும்
என்னை மனிதா நீயுன் வாழ்க்கையில்
இணைத்து இல்லற வாழ்விகூட நல்லறம்
பேனாது இன்று என்னை காரணமாக்கியே
தரமிழந்து என்னையும் தரம் தாழ்துகிறாய்
மனிதா மறந்துவிட்டாய என் தரம்தனை
அதனால்தானே உங்களில் சில நல்ல
குணமுள்ளவரை என்னோடு ஒப்பிட்டு
அவரையும் சேர்த்து பெருமை படுத்துவீர்
எந்தன் தரத்திற்கு உன்னை நீ எப்போது
உயர்த்துகிறாயோ அப்போதுதான் என்
பிறப்பிற்கும் ஓர் அர்த்தம் கிடைக்கும் ,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....