ஒரு பாடல் உருவாகிறது குமார்ஸ் குமரேசன்

ஒரு பாடல் உருவாகிறது ..
என் சில வரிகள் உங்களோடு ..

காதல் பாடல் :

மெட்டு & எழுத்து :குமார்ஸ்

பல்லவி :

ஒரு காதல்..உருவாச்சு
என் மனசேனோ மெழுகாச்சு
நிழல் தேடும் மரம் ஆச்சு ..
குடை சேரும் மழை ஆச்சு ..

ஒரு ...ஒரு காதல்..உருவாச்சு
என் மனசேனோ........மெழுகாச்சு

சரணம் 1:
என் அறை முழுதும் உன் புகைப்படங்கள் ..
உன் பெயர் எழுதும் என் நக கணுக்கள் ....
பூக்களிலே உன் முகம் இருக்கும் ..
பூங்குயிலும் உன் குரல் கேட்க்கும் ..
கோலம் இல்லா என் வாசலடி ..
உன் கை விரல்கள் தொட ஏங்குமடி..

ஒரு காதல் உருவாச்சு ..
என் மனசேனோ மெழுகாச்சு....

சரணம் 2:
அடி எடுக்கும் உன் கால்கள் ரெண்டும் ....
உன் நிழல் ஏந்தும் என் கைகள் ரெண்டும் ..
பனியில் செய்த ஒரு சிலை தானோ நீ
என் பார்வை தந்த ஒரு வரம் தானா ..
நீ உருக என் உயிர் உறையும் ..
நிலவொளியும் ..ஏன் வெயில் மருகும் ....

ஒரு காதல் உருவாச்சு ..
என் மனசேனோ மெழுகாச்சு....

நட்போடு ..

#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (24-May-14, 3:12 pm)
பார்வை : 164

மேலே