உருகாத மெழுகுகள்

மலரே!
வண்டாகக் காத்திருக்கிறேன்
உன்னருகில் நான்-
நீ வாடும் முன்னே
வாழ்வு தர...

நிலவே!
மேகமாகத் தொடர்கிறேன்
உன்னை நான்-
நீ தேயும் முன்னே
அணைத்துக்கொள்ள...

ஆனால் நீயோ-

இன்னும்
மலராத மொட்டாய்...
வளராத பிறையாய்...

20.01.1994

எழுதியவர் : மனோ & மனோ (24-May-14, 4:06 pm)
பார்வை : 106

மேலே