அன்பின் வலி
இருக்கலாம் அன்பாய்
அனைவரிடமும்
ஆனால் நிறுத்தி
விடு அப்பட்டமாய்
வெளிபடுத்துவதை
இல்லையெனில்
உணர்வாய் உலகின்
உயர் முட்டாள்
நீயென
ஏங்கினேன்
அன்பு கிட்டில்லையென
உணர்ந்தேன் துணிந்தேன்
ஏற்பில்லை எனிலும்
கொடுக்க
என்னுளிருக்கும் அன்பை
பிரதிபலித்தேன்
பாசத்தால் நேசத்தால்
வார்த்தையால்
உணர்வுகளால்
இப்பார் பணிந்து
அளித்த அழகிய
பட்டம் எனக்கு
"கோமாளி"
கொள்ளையடிக்க
நினைத்தது கொடும்
செல்வங்களை
அல்ல உயர்
உள்ளங்களை
வாரிக்கொடுத்தேன்
வள்ளல் என்பதனாலல்ல
இல்லை என்பதன்
வலி உணர்ந்ததால்
எப்போதுணருமோ
என் தேசம்
உண்மை அன்பின்
உயிர் வலியை!!
அன்புடன் சகா
*** பயமறியான் ***