தத்,த்வம்,அசி
"தத் ,த்வம், அசி "
---------------------
என்றாவது ஒரு நாள்
உன் மனதைத் தொட்டு
"இந்த நான் யார் ?"
என்று கேட்டதுண்டா?
அந்த கேள்விக்கு
பதில் கிடைத்த துண்டா?
அவ்வாறு என்று கேட்டாயோ
அன்றே இப்பிறவியின்
அரைப்பயணம் முடிந்ததாகும்
என்ன புரியலையா ?
அகந்தை என்னும் திரை
நம்மை ஆட்டிபடைக்கும்
அத்திரை விலகிட
பக்குவம் பிறக்கும்
அப்போது உன்னை உணர்ந்திட
உதயமாகும் முதல் வினா
அதுதான் "இந்த நான் யார் ?"என்பது
அது சரி , "அந்த நான் யார்"?
இதோ எனக்கு கிடைத்த பதில்
இந்த உலகில் பிறந்தேன்
உடல் தான் என்னைதாங்கும்
ஒரு உன்னத வாகனம்
எனக்கென்று முகவரி
ஆனால் ஒரு நாள்
இந்த உடல் நலிகின்றது
ஒத்துழைக்காமல் மடிகின்றது
அப்போது எங்கே போனது
அந்த "உந்தன் நீ"?
உயிர் அது பிரிந்தது
இறையைத் தேடி
ஜீவன் பரமனைத் தேடி
ஜீவன் உன்னுள் உறைகையில்
இறைவனும் உன்னுள் உள்ளான்
அகந்தைத் திரை கிழிந்தால்
உன் உள்ளத்துள்
அந்த இரையைக் காணலாம்
"தத் தவம் அசி" அதுவே
வாழ்க்கைப் பயணம் முடிவும்
அந்த பதிலில் அடங்கும்