அழ மாட்டேன்

மீசையின் மீது மிருகத்தனம்
மனதினுள்ளே சிரிக்க கஞ்சத்தனம்
ஏனிந்த பயம்?
ஏமாறும் மனம்
மக்கள் நடுவில்
மானம் சிறந்தது
மறைந்து கொண்டு
மெல்ல அழுதது
மதியினில் கலக்கம்
மாற்றம் இல்லை
தனிமை தகர்த்தது
தாங்க முடிந்தது
அமைதி அனைக்க
அனைத்தையும் துறந்தது
தலையனை ஈரம்
நண்பன்
எச்சிலென சிரிக்க
போர்வை புரிந்தது
அடுத்த அழுகைக்கு
தயாரானது தலையனை...