அனைத்தையும் மறந்தேன்

கதவுகள் மூட
கவிதைகள் சுரக்க
கவலைகள் மறந்தது- பல
கவிஞர் கருத்துகளில்...,
படிப்புகள் குறைய
படைப்புகள் சிறக்க
பாதிப்புகள் பாதியானது-சில
பொத்தான்களின் படபடப்பில்..,
காயம் கரைய
கனவுகள் குறைய
மனதும் வலித்தது
கைப்பேசியின்
"பேட்டரி லோ" சத்ததில்..,
தொழில்நுட்பம் வளர்ந்தது
தேவைகள் தேவையானது
ஆயிரம் ஆடம்பரமாயினும் -மனம்
அனைத்தையும் மறந்தது
கைப்பேசியும் மடிக்கணினியும்
மூடாமல் இருந்ததால்...