கிளிகள்

மாலை மலைபுரத்தே மறையும் மகரமந்தி
கனியென்று கொண்டு கிளிக் கூட்டம் கிளம்பியதே
பொழுதில் செங்கனி பொழுதும் பொதிந்திடவே
உண்ட மயக்கமோ , கிளிகளும் உறங்கினவே .
===========================================
பொருள்
மாலை பொழுதில் மலைகளிடையே அஸ்தமனமாகும் மங்கிய சிவப்பு நிற சூரியனை (மகரமந்தி) பழம் என்று கிளிகள் பறக்கின்றன. சிறிது நேரத்தில் சூரியன் மறைகிறான் . கிளிகளையும் காணவில்லை . கிளிகள் தாம் அதை உண்ட களைப்பில் உறங்கிவிட்டனவோ !