அந்த நொடிகள்

அன்று இரவு அவள் வீட்டில் யாரும் இல்லை . அப்பொழுது அழைப்பு மணி கேட்க அவள் சென்று பார்க்கையில் அவளது தோழி ஹர்ஷனி பலத்த காயங்களுடன் வீட்டு முற்றத்தில் நிற்பதைப் பார்த்தாள் கவிதா ....

அவளை கண்டு அதிர்ச்சியில் உறைந்தவள் சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டவளாய் உடனே அவளை உள்ளே அழைத்து காயங்கள் ஏற்பட்ட காரணத்தை கேட்டாள். ஆனால் ஹர்ஷினியோ தாகத்திற்கு தண்ணீரும் காயத்திற்கு மருந்தும் எடுத்து வரும்படி கவிதாவிடம் சொல்லி விட்டு விறு விறு வென்று படிகள் ஏறி மொட்டை மாடிக்கு சென்றாள்...


குழப்பத்தில் ஆழ்ந்தாலும் ஏவலை தாங்கும் சேவகிப் போல தன் தோழியின் வார்த்தைகளை மூளை கை கால்களுக்கு கட்டளையிட நீரும் முதல் சிகிச்சை அளிக்கும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தாள் ...
தாகம் தீர்ந்த ஹர்ஷினி காயத்தால் சோர்வுற்ற நிலையில் கீழ் அமர்ந்து கவிதாவை பார்க்க வரும் வழியில் தான், தனக்கு இந்த கோர சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லிக்கொண்டிருந்தாள் ...
அதே தருணம் அந்த ஒலி கேட்டது ...அதே ஒலிதான்
மீண்டும் கேட்டது...
ஒலி தான்.. தொலைபேசியின் ஒலி தான் ..மீண்டும் மீண்டும் ஒலிக்கவே ஹர்ஷினியின் பேச்சை இடைமறிதவளாய் கவிதா தன் சென்று பார்த்து வருவதைக் கூறிசென்றாள்.....

கவிதா தொலைபேசி ஒலியை நிறுத்தி அவள் குரலை உயர்த்தி ஹலோ சொல்கையில் எதிர்முனையில் ஹலோ சொன்ன நபர் பதட்டமான நிலையில் இது வரையிலும் தன்னுடன் உரையாடிக் கொண்டிருந்த ஹர்ஷினி மரண தேவனை தழுவி 2 மணி நேரம் ஆனதை விவரித்து விட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார் .....
நிலைகுலைந்த நிலையில் நின்ற கவிதாவிற்கு மற்றுமோர் அதிர்ச்சிதான் மின் இணைப்பு துண்டிப்பு ....

இதே சம்பவம் உங்கள் வாழ்விலும் நிகழ்ந்தால் உங்கள் நிலை என்ன ...........????????

எழுதியவர் : ஹர்ஷினி (25-May-14, 11:28 pm)
Tanglish : antha nodigal
பார்வை : 258

மேலே