ராஜேஸ்வரி

அந்த வீட்டில் ஒருவகைப் பரபரப்பு ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌன மொழி பேசிக் கொண்டிருந்தனர்.சரஸ்வதி அழுது கொண்டே கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.கணவன் மணியன் வீட்டின் முகட்டை வெறித்தவராக உற்காந்திருந்தார்.

எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அக்குடும்ப குளத்தில் யாரோ கல்லெறிந்துவிட்டார்களொ தெரியவில்லை.அக்கம் பக்கத்தினரெல்லாம் சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போன்று இல்லாத பொல்லாததெல்லாம் கதைக்கத் தொடங்கிவிட்டனர்.
மணியனுக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவள் பெண் பிள்ளை மற்ற மூவரும் ஆண்பிள்ளைகள். மூத்தவள் ராஜேஸ்வரி கல்லூரி ஒன்றில் கற்றுக் கொண்டிருந்தாள்.நல்ல புத்திசாலிப் பெண் கல்லூரியில் ராஜேஸ்வரி என்றால் ஒரு தனியிடம் அவளுக்கு.
அனேகமான குழுக்களுக்கு அவளே தலைமை வகிப்பாள்.எதிர்காலத்தைப் பற்றி நல்ல சிந்தனையுடையவளாக இருந்தாள்.பலருக்கு புத்தி சொல்லக்கூடிய புத்தி சாதுர்யமான பெண்.அழகென்றால் சுமார்தான்.அழகுக்காக இல்லாவிட்டாலும் அவளது ஆளுமைக்காக யாரும் அவளை விரும்புவர்.வீட்டில் அவளுக்கொரு பட்டப் பெயரும் உண்டு.தலைவி அதுதான் அவளது பட்டப் பெயர்.வீட்டில் எது செய்வதாக இருந்தாலும் அவளைக் கேட்காமல் நடைபெறாது.அவளது தம்பிமார் அடிக்கடி கிண்டலாக தலைவி தலைவி என அழைத்து அவளைச் சீண்டிப் பார்ப்பார்கள்.
இப்படி கெட்டித்தனமுள்ள அவளா இப்படிச் செய்தாள்.எவராளுமே இதனை நம்பமுடியவில்லை.இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றவள்.வீடுதிரும்பவே இல்லை .அவளது தோழி ஒருத்தி ராஜேஸ்வரியை விசரிக்க தொலைபேசி தொடர்பு கொண்டபோதுதான் விசயம் விளங்கவந்தது.சுற்றுலா எதுவும் செல்லவில்லை என்ற செய்தி.இத்தகவலைக் கேட்ட எல்லோரது உள்ளங்களிலும் பல்வேறான கேள்விக் குறிகள்.
இல்லை அப்படி இருக்காது என தங்களது உள்ளங்களைத் தேற்றிக் கொண்டாலும் மனங்கள் நிம்மதி பெற முடியவில்லை.எவரிடமும் விசாரிக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் ஊமைகண்ட கனவு போல தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
ராஜேஸ்வரி தனது கல்லூரியில் கற்கும் எல்லோரிடமும் நல்லபிமானம் பெற்றதுபோல் எல்லாஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுத்திருந்தாள்.தமிழ் ஆசிரியர் கமலக்கண்ணனிடமும் அப்படியே!
கமலக்கண்ணன் ஒரு சிறந்த தமிழ் அசிரியர்.இலக்கிய நயம் கற்பிக்கின்றபோது தன்னையே மறந்து கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்.ஆனால் அவர் வாழ்க்ைகதான் நயமின்றிப் போனது.ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் தனது மாமன் மகளை முடித்து சந்தோசமாக வாழ்நது கொண்டிருக்கும் வேளை கொள்ளை நோய்க்கு ஆளாகி இறந்து போனாள்.மனைவி இறந்து பல வருடங்கள் சென்றும் வேறு திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்து வந்தார்.
கமலக்கண்ணனின் வாழ்க்கை பற்றி கல்லூரியில் அகேமானவர்களுக்கு தெரிந்திருந்தது.அதனால் எல்லோருமே அவரை அனுதாபக் கண்கொண்டே பார்த்து வந்தனர்.ராஜேஸ்வரிக்கும் அவர்மேல் அனுதாபம் கலந்த தனிமரியாதையும் இருந்தது.
ஒருமுறை பாடத்தில் சந்தேகம் ஒன்றைக் கேட்பதற்காக கமலக்கண்ணனின் விடுதிக்குச் சென்றிருந்தாள்.அந்த நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் கமலக்கண்ணன்.சேர் என ராஜேஸ்வரி அழைத்தபோதுதான் இவ்வுலகுக்குத் திரும்பினார்.
தனது சந்தேகங்களை கேட்டுத தௌிவுபெற்ற அவள் நீண்ட நாட்களாகக் கேட்க ​வேண்டும் என்றிருந்த விடயத்தை கேட்டுவிட்டாள்.ஏன் நீங்க மீண்டும் திருமணம் முடிக்கல? பெண் கிடைக்கல என்று ஒரே பதிலாக சொன்னதைக் கேட்டு ராஜேஸ்வரி ஏன் கிடைக்கல என்று கேட்டாள்.
இல்லை, என்ற வயது இப்ப 48 இந்தவயதுக்கு பெண் எங்க தேடுரது அதான் பேசாமல் விட்டுட்டன்.
உங்கட அறிவுக்கும் அழகுக்கும் உங்களை யாரும் முடிப்பாங்க என்றவளிடம் நீ முடிப்பியா என்று கேட்டுவிட்டு சிரித்தவராக சும்மா ஜோக்குக்கு சொன்னேன் மனசுல வையாதே என்று சொன்வரிடம் யோசித்துச் சொல்றன் என்று கூறிவிட்டு கிறுகிறு என நடந்து சென்றாள்.

ராஜேஸ்வரி குடும்பத்தால் இதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.ஒரு இளைஞனுடன் சென்றிருந்தாலாவது பரவாயில்லை.கொஞ்ச நாள்ல மறந்திடும்.இப்படி ஒரு வயசாலியோட...

வீட்டுக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசற்படிக்கு வந்து பார்க்க ஆட்டோவிலிருந்து ராஜேஸ்வரியும் கமலக்கண்ணனும் இறங்கிவந்தனர்.

எல்லோரும் என்னை மன்னிச்சிப் போடுங்க எனது விருப்பத்தை உங்கட்ட சொல்லிருந்தா யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டீங்க அதான் சுயமா முடிவெடுத்தன்.நான் இதை விரும்பித்தான் செய்தனான் நான் சந்தோசமா இருக்கனும்னா நீங்க எல்லாரும் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.உங்களுக்குத் தெரியும் நான் எடுத்த முடிவு சரியா இருக்கும் என்று.ஏற்றுக் கொண்டு எங்களை ஆசீர்வாதிங்கோ என்று கூறி காலில் விழுந்தவர்களை என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே திகைத்து நின்றார் அவளது அப்பா!.

மனங் கொண்டதே மாளிகை சமூகத்துக்காகப் பயந்தால் வாழ முடியாது நான் உங்களை திருமணம் முடிக்க எனக்கு பூரண சம்மதம் சேர்.

பெற்றார் சம்மதம் கிடைக்காது .முடித்த பின் சம்மதம் நிச்சயம் கிடைக்கம் என்று கூறி கோயிலில் திருமணமனம் முடித்த பின்னர்தான் தந்தையின் ஆசிர்வாதம் வேண்டி நின்றாள் ராஜேஸசவரி.

எழுதியவர் : ஜவ்ஹர் (25-May-14, 7:55 am)
பார்வை : 264

மேலே