ராஜாளிப் பறவை

வல்லுரு ஓன்று வானில் பறந்து
வருகுது இங்கே .....! வட்டமடித்து
வட்டமடித்து கோழி குஞ்சிகளை
கொத்தி தூக்கிட பறந்து வருகுது இங்கே ...1

பிணந்தின்னி கழுகு அது அப்பாவி
மனிதர்களை கொத்துக் கொத்தாய்
கூறு போட்டு கொன்று குவித்தது அங்கே
உறவு என்ற வெள்ளை உடை பூண்டு
உதட்டில் வஞ்சக சிரிப்போடு
கள்ள நாடகமாட பறந்து வருகு இங்கே

உறவையும் உடமைகளையும் இழந்த
நம் அப்பாவி உறவுகள் ஒரு
வேலை சோற்றுக்கு வாடி வதங்குது அங்கே
நம் உறவுகளை வாட விட்டு வந்த பருந்து
நட்புக் கரம் நீட்டுது இங்கே .............................!

கொடும் பேய் இடமும் கொஞ்சம்
இரக்க குணம் இருக்கும் இந்த
ராஜாளிப் பறவை இடம் இன்னமும்
கூறுப் போட்டு கொன்று போடும்
கொலை வெறி மட்டும் தான் இருக்கும்

பறந்து வரும் பறவையை சிறை
எடுப்போம் - பட்சி அதன் சிறகை
முறித்திடுவோம்- ரத்த தாகம் கொண்ட
கழுத்தை அறுத்திடுவோம் - நட்பாக
நடிக்கும் ராஜ வல்லுரை அழித்திடுவோம் ..!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (25-May-14, 11:51 pm)
Tanglish : raajalip paravai
பார்வை : 266

மேலே