நாளை வரும் வண்டு
மலர் என்று என்று
மடல் கொண்டு கொண்டு
தினம் சென்று சென்று
வரும் வண்டு வண்டு
உனைக் கண்டு கண்டு
உயிர் நின்று நின்று
துடித் திட்ட தின்று
துயர் என்று முண்டு
இதழ் மொட்டு என்று
கடித் திட்ட தின்று
சுவை விட்ட தென்று
பறந் திட்ட தின்று
பாவம் வண்டு என்று
பாவை நின்ற துண்டு
மீதி தேடி ஓடி
நாளை வரும் வண்டு