கண்ணிலே நிக்குது இதயமும் நிறையுது

​​1.
​மலரொன்று பறிக்குது மலர்களை மகிழ்வுடனே
மனமும் குளிர்கிறது மழலையை கண்டவுடனே !
பூத்து குலுங்குது பூந்தோட்டத்தில் பூவொன்று
பூரித்து பறிப்பதாலோ புன்னகையும் தவழ்கிறது !

2.
மலர்ந்த மொட்டொன்று மலர்ந்திட்ட மலர்களை
புலர்ந்த பொழுதினிலே உலருமுன் கொய்கிறது !
முகர்ந்த வாசத்தை முகமதுவே உணர்த்துகிறது
நுகர்ந்து அறிந்ததை நுண்ணறிவால் கொள்கிறது !

3.
விரும்பியதை செய்யும் அரும்பு மலரிதுவும்
கரும்பு சுவைபோல கற்கண்டு மழலையிது
இனிக்கும் இளந்தளிரிது பறித்திடும் அழகிது
கண்ணிலே நிக்குது இதயமும் நிறையுது !

பழனி குமார்

( குறும்பா அல்லது வெண்பா எழுதவேண்டும் என நினைத்தேன் ஆனால் வரவில்லை )

எழுதியவர் : பழனி குமார் (26-May-14, 10:26 pm)
பார்வை : 493

மேலே