உயிரே உயிரே
உயிரே உயிரே
உனக்காய் நான் பிறந்தேனடி
நடுவில் தெரியும்
விளக்காய் வானில் ஒளிர்ந்தேனடி ...
என்கண்ணில் பாடும் கீதம்
உந்தன் பார்வையில் தானடி
என்வார்த்தை போடும் தாளம்
உந்தன் பேச்சில் கேளடி ...
நெஞ்சில் கொஞ்சம் நாளாய்
உந்தன் பிம்பம் தெரியுதடி
இரவில் இல்லை தூக்கம்
உந்தன் கனவால் தொலையுதடி ...
மண்ணில் பூத்த பூப்போல்
எந்தன் நெஞ்சம் மலருதடி
கண்ணால் காணும் யாவும்
காட்சி பிழைபோல் தோன்றுதடி ...
ஒருபார்வை பார்த்து போறாயே
பெண்ணே மனசும் மாறுத்தடி
சிலநேரம் பார்த்து சிறித்தாலே
மனதில் மழைபோல வீசுதடி ...
கலைந்தாலும் காற்றில் உள்ள
மேகம் மீண்டும் மிதக்குதாடி
அதுபோல பெண்ணே என்னுள்
உந்தன் காதல் கலக்குதாடி ...