தோழியின் காதலுக்காக

கைப்பேசியில் பணமாற்றமென பலமாற்றங்கள்
துளி சேதியில் அன்பென பரிமாற்றங்கள்
செல்வமாய் குவிந்திட பலசேவைகள்
செல்லமாய் கொஞ்சிட பலசேதிகள்


தோளினில் தோழியால் ஒரு தட்டு
முகத்தினில் முறுவளில் ஒரு திட்டு
மக்கென மண்டையில் ஒரு கொட்டு
தேர்வின் தோல்வி இதற்கென புரியட்டுமே

உணவினை ஊட்டி தாய் வளர்த்தாள்
உணர்வினை ஊட்டி நீ வளர்த்தாய்
உன்னாலே சிறந்தது பெண் இனமென
மதியையும் நினைத்தேன் உன் இனமென

செல்லமே தங்கமே இது போதுமா
உனை கொஞ்சவே
மெல்ல கண்ணீரும் வடிக்கட்டுமா
உனை மிஞ்சவே
உந்தன் மௌனமும்
கொஞ்சம் மெல்லிசையே

நிலவே நிச்சயம் நீ நீங்கிடுவாய்
உனக்கு நிச்சயம் என நடந்ததும்
மனமோ இது தாங்கிடுமே
நட்பே இன்றே நீங்கிவிடு

உலகம் தேடி அழைந்திடவே
பாதி ஜென்மம் தேவை உழைத்திடவே
உனைவிட்டு இன்றே செல்கின்றேன்
நட்பே நீயே நீங்கிவிடு....

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (26-May-14, 2:57 pm)
பார்வை : 159

மேலே