உன் வலி எனதல்லவா
உன் வலி எனதல்லவா.....
அன்பே
உன்னிடம் எந்த நொடியில்
என்னை இழந்தேனென்று தெரியவில்லை...
அந்த நொடி முதல்
உன் பிரிவை
சற்றும் சிந்திக்கவே இல்லை...
சிந்திக்கவும் இயலாத ஒன்றை
இன்று பரிசாக தந்து
புன்னகையுடன் ஏற்க சொ(கொ)ல்கிறாய்...
என் செய்வேன்....
தயங்காமல் கூறிவிட்டாய்...
உன்னை பிடிக்கவில்லை,
மன்னித்து விடு
தண்டித்து விடு என்று...
என்னவனே நொறுங்கிவிட்டேன்
இதயம் சிதைந்து...
குருதி நாளங்கள் சிதற..
விழிகள் பெருக்கெடுக்க...
உடைந்து போனேனே...
கனவாய் போகாதோ என்று
துடித்துப் போனேனே...
என்ன தண்டனை தருவேன்
உன் வலி எனதல்லவா....