தாயின் தவிப்பு
இளந் தையில்
இலந்தை இல்லை
இழந்தது மனசு
குலம் தழைக்க வழியின்றி
குழந்தை இல்லா ஏக்கம்
குளம்பி தவிக்குது தாக்கம்
பால் சுரக்கா மார்பால்
பாழாய் போன உறவால்
தாழ்பாள் திறவா கிடக்கின்றேன்
வலுவிருந்தும்
வளுவிழந்து தவிக்கிறேன்
வழுவிய வாக்கால்...
இரைந்து தவிக்கிறேன்
இறைவன் அருளட்டும் ...