நிஜங்களின் நிழல்

ஐ-போன்களின்
தொடுதிரையின் நழுவலில்
நிரம்பிவழிகிற
'ஹஸ்கி' வாய்ஸில்
முனகும் காதல்
அவசர அன்பில்
இன்று தொலைந்திடல் பிடிக்கும்.

நீண்ட குழாயின்
தூரத்தின்
ஒரு முனையில் பேசி
மறு பக்கம்
கேட்கும்
'எக்கோ' வாய்ஸில்
எதிரொலித்த காதல்
இனியென்று தேடியும் கிடைப்பதற்கில்லை..

இன்னும் சாப்பிடலையாடா ??
அதுக்குள்ள எங்க போய்ட்ட லூசு ??
தூங்கிட்டியா செல்லம் ??
இப்படி அனுதினமும்
குறுஞ்செய்திகளின்
கொஞ்சல்களுக்கு
மறுபதில் அனுப்பி
பின்
மறையும் நினைவுகளில்
இயல்பாக பழகிவிட்டிருக்கிறோம்..

அன்புள்ள உயிரே
இதை எழுதுகையில்
இங்கே நல்ல மழை..
என எழுதும் கடிதங்களுக்காக
நனையாமல்
காத்திருந்த நாட்களில்
பிரியத்தின் ஞாபகங்களில்
எப்போதும் காதல் ஈரத்தின்
அடர்த்தி குறைந்ததேயில்லை...

இப்படி இன்னும்
எத்தனையோ
யதார்த்தங்களின்
நிஜங்களை
நிராகரித்தும்
புறக்கணித்தும்
நவயுக வாழ்க்கையின்
போலி நிழல்களுக்கு
இயல்பாகிப் போன
உங்களைப் போன்றோரில்
ஒருவன்தான் நானும்...

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (29-May-14, 5:12 pm)
பார்வை : 97

மேலே