கடவுளின் ஒளிச்சுடர் ==ஆசிரியப்பா

நிறைவுள மனமது ஒருநிலை அடைந்திட
முறையுடன் புரிந்திடும் அழகிய தவமது
மலரிதழ் உறங்கிடும் பனியென
வரமெனப் பெறுவது இறைவனின் முகமே!

திருமுக தரிசன வரமதை அவன்தரும்
ஒருகணம் அடைகிற பரவசம் உளமதில்
இருளது அகன்றிட வருகிற
பொருளென துலங்கிடும் ஒளிச்சுடர் கதிரே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-May-14, 3:38 am)
பார்வை : 137

மேலே