மனதுக்கு பிடித்தவர்கள் Mano Red

யார் என்பதும்,
யாராக இருக்குமென்பதும்
முக்கியமில்லை,
யாராகவும் இருக்கலாம்
ஏனென்றால் அவர்கள் நம்
மனதுக்கு பிடித்தவர்கள்..!

ஏன் வந்தார்கள்
எதற்கு பேசினார்கள்
என்பதும் தேவையில்லை,
எப்போதும் வந்து பேசலாம்
ஏனென்றால் அவர்கள் நம்
மனதுக்கு பிடித்தவர்கள்..!!

அன்பான அந்த ஒருவர்
காரணமின்றி பேசிய போது
ஏற்றுக் கொண்ட மனம்,
ஏதோ ஒரு காரணத்திற்காக
அந்த ஒருவர் பேசாத போது
ஏற்க மறுப்பதற்கு ஒரே காரணம்.!
ஏனென்றால் அவர்கள் நம்
மனதுக்கு பிடித்தவர்கள்..!!

நினைக்க கூடாது என
முடிவு கட்டிய நாட்களில் தான்
அந்த ஒருவர் பற்றிய நினைவு
ஆக்கிரமித்துக் கொள்ளும்..!!
ஏனென்றால் அவர்கள் நம்
மனதுக்கு பிடித்தவர்கள்..!!

நம்மைத் தேடி யார் வந்தாலும்
நாம் கவனிக்காத காரணம்,
நாம் தேடும் அந்த ஒருவர்
நம்முடன் இல்லை,
ஏனென்றால் அவர்கள் நம்
மனதுக்கு பிடித்தவர்கள்..!!

எது எப்படியோ அந்த ஒருவர்
சந்தோசத்தில் பேசினாலும்,
சங்கடத்தில் பேசினாலும்
விட்டு விலக மனம் மறுக்கிறது.!!
ஏனென்றால் அவர்கள் நம்
மனதுக்கு பிடித்தவர்கள்..!!

நல்ல நட்புறவில்
மானமும்,மரியாதையும்
அவசியமற்றுப் போன ஒன்று..!!
மனதுக்கு பிடித்தால் போதும்
எல்லாமே தன்னால் சேரும்..!!

எழுதியவர் : மனோ ரெட் (30-May-14, 8:30 am)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 58

மேலே