நன்றி பாடல் - நல்லதொரு தந்தைக்கு - சி எம் ஜேசு

நல்லதொரு தந்தைக்கு - நாங்க
நன்றிகளை சொல்ல வந்தோமே
இல்லை ஒரு துன்பமும் - நீங்க
சொல்லித் தந்த நல்லச் சொல்லினால்

சூசைப்பரே ! - எங்க சூசையப்பரே
சூசையப்பரே ! - தந்தை சூசையப்பரே

வாழ்வில் வந்த சோகங்களை
மீட்டுத் தந்தீர் சுகங்களாய்
தந்தை உம் சொல்லுக்கிணங்கி - இனி
அம்பினைப்போல உழைப்போம்

சூசைப்பரே ! - எங்க சூசையப்பரே
சூசையப்பரே ! - தந்தை சூசையப்பரே
* * * * * * * * * * * * * * * * * ( நல்லதொரு ..

மண்ணுலகில் நீர் பிறந்து
நன்மைகளை எமக்கு செய்தீர்
விண்ணுலகின் வேந்தனை - உம்
தோல் மீது சுமந்தாயே

சோகங்கள் சுமைகள் தாங்கி
சொந்தங்கள் கூடி வாழ
அருள் பொழிந்து பொருள் உதவிடும்
இதய தேவ சூசைமா முனியே

சூசைப்பரே ! - எங்க சூசையப்பரே
சூசையப்பரே ! - தந்தை சூசையப்பரே
* * * * * * * * * * * * * * * * * ( நல்லதொரு ..

கண்ணை இமை காப்பது போல்
நன்மைகளை கற்று தந்தீர்
மாதா சொல்லின் மாண்பை நீர்
மனம் சுமந்து காத்தீரே

வேதங்கள் கீதங்கள் இசைக்க
தந்தையாம் உம்மை துதிக்க
உலகு நிறைந்த நன்மைகள் சூழ்ந்து
உம்மை போற்றிட செய்யுமே

சூசையப்பரே -எங்க சூசையப்பரே
சூசையப்பரே தந்தை சூசையப்பரே
* * * * * * * * ( நல்லதொரு ..

எழுதியவர் : சி . எம் . ஜேசு (30-May-14, 3:39 pm)
பார்வை : 192

மேலே