கோபம் ஜென் கதை

*
பாங்கே [ BANKEI ] என்ற ஜென் மாஸ்டரிடம் ஒரு ஜென் மாணவன் வந்து ” மாஸ்டர், என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது. அதை நான் எப்படிச் சரி செய்வது?” என்று கேட்டான்.
அதற்குப் பாங்கே, “ உன்னிடம் ஏதோ மிகவும் வித்தியாசமான ஒன்று இருக்கிறது. அதுதான் கோபம்! எங்கே அதைச் சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம்.” என்றார்.
” இப்பொழுது என்னால் அதை உங்களுக்குக் காட்ட முடியாது் ”
“ எப்பொழுது அதை என்னிடம் காட்டமுடியும்? ”
“ அது தானே எதிர்பாராது மேலே கிளம்பும். ”
“ அது உண்மையானது என்றால், அது இயல்பானது என்றால், எந்தச் சமயத்திலும் அதை என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது, அது உன்னிடம் இருந்தது இல்லை. அதே சமயம் அதை உன்னுடைய பெற்றோர்களும் உன்னிடம் கொடுத்தது இல்லை. நன்றாக யோசனைப் பண்ணிப்பார். ” என்றார்.
கோபம் என்பது எதிர்ப்பார்ப்பதில்லை. ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல் [ REACTION ]. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது. ஏமாற்றத்திலிருந்து கோபம் உண்டாகிறது.
*
ஆதாரம் :- “ 100 ஜென் கவிதைகள் ” – என்ற நூலிலிருந்து.
* .

எழுதியவர் : ந.க.துறைவன் (30-May-14, 3:44 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 186

மேலே