தாயின் மனசு
தந்தையின் மரணத்திற்கு பின், மகன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான். ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் தொடர்பு கொள்வது அவன் வழக்கம். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கும் பொழுதெல்லாம் நன்றாகவே இருப்பதாக தாயார் பதில் சொல்லுவாள்.
சில மாதங்கள் செல்ல, தாயின் உடல் நலம் குன்றி விட்டதாக முதியோர் இல்லத்தில் இருந்து செய்தி வர, மகன் விரைந்து செல்கிறான்.
என்ன வேண்டும் என்று கேட்ட மகனைப் பார்த்து தாய், இங்கு ஃபேன் இல்லை. ஆகையால் இந்த அறையில் ஃபேன் போட்டுக் கொடு என்றாள். அதைக் கேட்ட மகன், இத்தனை வயசு ஆகி விட்டது. உங்களுக்கு ஃ பேன் எல்லாம் தேவையா அம்மா என்றான். அதற்கு அவன் தாய், "மகனே உனக்கு ஆஃபிசிலும் ஏ.சி. உள்ளது. வீட்டிலும் ஏ.சி. உள்ளது. எப்பொழுதும் அப்படியே இருந்து பழகிய நீ இங்கு வரும் பொழுது ஏ.சியும் இங்கு இல்லை. ஃபேனும் இல்லை. உனக்கு சூடு தாங்க முடியாதே என்று நினைத்துத்தான் ஒரு ஃபேனாவது உனக்காக இருக்கட்டுமே என்று தான் சொன்னேன் என்றாள்.