இன்பத்தின் எல்லைகள்
இன்பத்தின் எல்லைகள், இரவினின் மோகங்கள்
இறுக்கத்தில் இரு உடல், அந்த நெருக்கத்தில் வேர்வை கடல்
இதழினில் கனி ரசம், இடையினில் அவன் விரல் நகம்
இன்னும், இன்னும் என்று கேட்கும் உடல் வேட்கைகள்
இரவுகள் முடிவதில்லை இன்றுடன், இளமைகள் தீர்வதில்லை ஒரு நாளுடன்
இடைவெளிகள் வேண்டும் இன்பத்திலும், இனிமைகள் தொடர்ந்திடும் ஒவ்வொரு இரவிலும்
இலை மறை காய் போல அவள் உருவம், இளமையின் எழில் நிறைந்த பருவம்
இது எல்லாமே அவன் வசம், நிலவொளியில் அவள் அழகு அவனுக்கு வெளிச்சம்
நிலவுக்கு நன்றி கூறி, உறவுக்கு உச்சம் தந்து, சங்கமத்தால் சாந்தி கொண்டான்

