சக்தி வேண்டுதல்

தரவு கொச்சகக் கலிப்பா
கோலமயில் கூவுகையில் கொஞ்சுதமிழ் நெஞ்சினிலே
பாலெனவெ தேனெனவே பாயவேனும் பராசக்தி !
ஞாலமிதில் ஊருகின்ற ஞானமெல்லாம் ஒன்றாக்கி
பாலகனாம் நான்பாடப் பக்திவேனும் பராசக்தி !
தேனருவி போலெனக்கு தெவிட்டாத கவியருவி
நானினைக்கும் நேரமெல்லாம் நல்கவேனும் பராசக்தி !
ஊனடைந்த உயிர்மட்டும் உற்சாகமாய்ச் சென்று
வானடைந்து நின்புகழை வாழ்த்தவேணும் பராசக்தி!
மாதர்முகங் கண்டுவிட்டால் மனதுள்ளே கவிதைமலர்
காதலோடு பூத்துமணம் கமழவேனும் பராசக்தி !
ஆதவனை கவிதைகளால் அனைத்திழுக்க அன்னையே!நீ
சாதகமாய் அருளதனைச் சாற்றவேனும் பராசக்தி !
விவேக்பாரதி