அருள் வேண்டல்

அகிலத்தின் அதிபதியே! நான் தீயவனாகவும் தகுதியற்றவனகவும் இருந்தாலும் உனது வாசலை விட்டு எங்கு செல்வேன்? தெரிவிப்பயாக! ஏதுமற்ற ஏழையாகிய எனக்கு உன்னையன்றி எவர் இருக்கிறார்?

ஆதரவற்ற குழப்பமான நிலையால் நான் நாசமடைந்திருக்கிறேன் ,(ஆகையால்) என் இரட்சகனே ! என்னுடைய செயல்களைப் பாராமல் உன்னிடத்தில் உள்ள அருள், உபகாரம், கொடை ஆகியவற்றின் பொருட்டால் உனது அன்பைப் பொழிந்து கவனிப்பாயாக!

பாவம் என்னும் வானம் என் தலைமீது இருக்கிறது.. கவலை என்னும் படைகள் நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து இருக்கின்றன.. ,(ஆகையால்) இப்பொழுது விரைவாக உன்னிடத்திலுள்ள விசாலமான தயாளத்தின் பொருட்டால் இந்தப் பாவத்தால் பீடிக்கப் பட்டவனின் விடுதலைக்குரிய ஏற்பாட்டைச் செய்தருள்வாயாக!

தவசாலிகளுக்காக (அவர்கள் செய்த) தவத்தின் நம்பிக்கை இருக்கிறது.. பற்றற்றவர்களுக்காகப் பற்றின்மை என்னும் சாய்மானம் இருக்கிறது.. கையும் காலுமற்ற எனக்காக வேதனையால் "ஆஹ்" என்ற சப்தம் தான் ஊன்றுகோலாக இருக்கிறது...

நான் வறிய நிலையை விரும்பவில்லை... செவ்வநிலையையும் தேடவில்லை... வணக்கத்தையும் பேணுதலையும் ஆசிக்கவில்லை.. கல்வி ஒழுக்கம் ஆகியவற்றின் ஆசையும் எனக்கில்லை.. (ஆனால்) அல்லாஹ்விற்காக மனதில் ஏற்படும் வேதனை எனக்கு அவசியம் தேவை!

புத்தியையும் விளக்கத்தையும் சிந்தனையையும்
எண்ணிலடங்கா உலக பாக்கியங்களையும் எனக்கு நீ அருள் செய்தாய்! எனினும், இரட்சகனே! இப்பொழுது நீ அந்த பாக்கியங்கள் என்றென்றும் பயன் தருவதற்குரிய பாக்கியத்தையும் தந்தருள்வாயாக !

என்னுடைய நிலை அளவுக்கு மீறிக் குறையுள்ளதாகவும் , மகிழ்ச்சியற்றதாகவும் இருக்கிறது, யா அல்லாஹ் எல்லையில்லா உனது அன்பு, அருள் ஆகியவற்றின் பொருட்டால் உதவி செய்வதற்குரிய இத்தருனத்தில் நீ எனக்கு உதவி செய்தருள்வாயாக!

நான் குறைகள் நிறைந்த, பாவம் புரிந்த ஓர் அடியானாக இருக்கிறேன். குற்றம் புரிவது என் துணிச்சலாக இருக்கிறது... உனது திருநாமமோ மன்னிக்கிறவன் என்பதாக இருக்கிறது. நன்றி செலூத்துவோருக்கு நல்லுபகாரம் நல்கும் நாயனே! நான் எவ்வாரிருந்தாலூம் உன்னுடையவன் என்றே அழைக்கபடுகிறேன்..

நீயே சுகமலிக்கிறவன்.........

நீயே முக்கிய விஷயங்கள் அனைத்திற்கும்
போதுமானவன்.......

இன்னும் நீயே எனக்குப் பொறுப்பு
ஏற்பவர்களில் மிக நல்லவன்.........

எழுதியவர் : சைனுல் (1-Jun-14, 12:38 pm)
பார்வை : 74

மேலே