உன்னால் என்னில்

என் அதிகாலை உறக்கமே
உன்மேலுள்ள கிறக்கமே
உன்னை கண்டதும்
என் வார்த்தைகள் சருக்குமே ....
உன்னால்தானடி கவிஞன் ஆகிறேன்
என் புலம்பல் தானடி கவிதை ஆக்கினேன்
சம்மதம் சொல்லடி என் புலம்பல் வாழவே
காதல் கொண்டு நான் உன் நிழலாய் மாறவே
உன் மௌன கவிதைகள்
கண்களின் வார்த்தைகள்
உன் செய்கை அனைத்துமே
காற்றின் சாட்டைகள்
உன்னால் கிடைக்குமா
வாழ்க்கையின் அர்த்தங்கள்
கிடைத்தால் தீருமோ
என் மன வருத்தங்கள் ...
நீ கொடுத்திடும் வலிகளும் சுகமடி
இன்னும் கிடைத்திட என் இதய வாழ்த்துக்கள் ...