வயலில் வனிதையர் – நேரிசை ஆசிரியப்பா

அரிகிடைக் கருதின் மேலே உட்கார
விட்டார் களா!கருது உதிர்ந்து விடாதா!
தரிசு நிலத்தின் மேலே செருப்பே
போட்டு நடக்கக் கூடாது! ’சூ’க்காலை
கருதின் மேலே வைக்க
லாமா சொல்லுங்கள் வனிதை யரே!

அறிவோம் ஒரு தமிழ்ச் சொல்:

அரிகிடை - வட்டார வழக்குச் சொல், வயலில் கூட்டமாக கிடக்கும் அறுத்துப் போடப்பட்ட நெற்கதிர்கள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-14, 2:57 pm)
பார்வை : 220

மேலே