ஆள் பாதி ஆடை பாதி

ஆடை எம்மூடே
பயணிக்கும் அழகே
வாடைக் காற்றுக்கு
அசைந்தாடி
எம்மழகைக் கூட்டிடும்
பெருந் தோழி

ஆடையில் பாதி
அணிந்தவர் முழுமதி
அழகை மறைத்து
ஆடை வௌித்திடும்
இன்னும் தரும் வெகுமதி

மானம் காத்து
மறைத்து
உடலை அழகாய்
அணிந்தவர் பெருமை சேர்த்து
ஆடவர் பெண்டிர்
மதிப்பைப் பெறுவார்

நாடுகள் வேறு
இனங்கள் வேறு
அணிவதில் வேறென்றாலும்
அழகும் மானமுமொன்று

உடையது பல ரகம்
விலையது மலை மடு
ஏழைக்கும் உண்டு
பணமுண்டார்க்கும் உண்டு
வேறுபாடு விலையில்
அழகில் இல்லை அது

பெண் குறைத்தால்
கவர்ச்சி
ஆண் குறைத்தால்
கேவலம்
புரிதலில் தவறு
யாரிடம் இது

பண்பாடு சொல்லுமிது
கலாசாரம் காட்டுமது
மாது பெருமை
மானிடன் அருமை
அணிந்தவர்
பெறுவார்
பார்த்தவர் பரிவார்

சேலை கட்டியவள் ஒருத்தி
தாவணி போட்டிடுவாள் ஒருத்தி
உடை சொல்லும் மூப்பிளமை
சில வேளை அதுவுமிலை
அணிந்து பார்த்து
ரசித்து
மற்றவர் ரசிக்க
உடுத்துமுடை

நாகரீகம்
அநாகரீகம் இதிலுண்டு
அணிவதில்தான் அது உண்டு
உடல் தெரிய
உடையணிந்து
பார்த்திடுவர் சிலர்
உடல் முழுக்க மறைத்து
உடல் காத்து
மானம் காப்பர் சிலர்

உடையது பெருமை
உடல் சொல்லும்
உளம் சொல்லும்
பார்ப்பவர் மனம் சொல்லும்
ஆள் பாதி ஆடை பாதி

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (2-Jun-14, 6:18 am)
பார்வை : 779

மேலே