அன்பின் உயர்நிலை

அடிவானம் கடலும் காதல் கொள்ளும்- அந்தி பொழுதில் அன்பே
எண்ணைக்கான நீ வருவாயா?

அன்றலர்ந்த மலராய் காத்திருக்கிறேன் அன்பே -என்
மடி சாய வருவாயா ?

இறந்தாலும் இருந்தாலும் என் நெஞ்சின் நினைவாக நீ இருப்பாயா ?

சொர்க்கத்தின் வலி அது தெரியாது -என் சொந்தமாக
எந்நாளும் நீ இருப்பாயா ?

எதற்காகவும் என் நெஞ்சில் பயம் இல்லை -நான்
பிரியேன் என்ற வரம் தருவாயா ?

காதலின் உயர்நிலை மரணம் -அந்த சாவையும்
உன்னுடனே தருவாயா ?

தள்ளாடி நீ நடக்க உன்னை தோளோடு சாய்த்திட துணையாய் நான் வருவேன் -மஞ்சள் நாண் ஒன்றை பரிசாக தருவாயா ?

எழுதியவர் : நிஷா (2-Jun-14, 11:01 am)
Tanglish : anbin uyarnilai
பார்வை : 92

மேலே