சிணுங்கல்கள் கவிதை

*
அக்காவுக்கும் மாமாவுக்கும்
எப்பொழுதும் எதற்காகவேனும்
ஒன்றுமில்லாதற்கெல்லாம்
சின்னச் சின்னச் சண்டைகள்
அரங்கேறும்.
யார் தோற்பார்கள்?
யார் ஜெயிப்பார்கள்?
என்பதெற்கெல்லாம்
யாரும் கவலைப்படுதில்லை.
எல்லோருக்கு மிது
பழகிப் போய்விட்டது.
அனைவரும் அமர்ந்து
சாப்பிடும் வேளையில்,
மாமா எதையேனும்
பேசி மழுப்பிச் சிரிப்பார்.
தொலைக் காட்சி
தொடர் நாடகம் பார்க்கும்
அக்கா,
சிரித்துச் சிரித்துச்
சண்டையை மறப்பாள்.
அவரவர்கள் அறைக்குள்
ஆமையெனப் பதுங்கிக் கொள்வர்
உறங்கச் செல்ல,
குளிர்ச்சாதன அறையின்
குளிர்ச்சியில் மனம் அடங்கும்.
இருட்டில் மெல்ல மெல்ல
சிணுங்கல் சிரிப்பும் அடங்கும்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Jun-14, 12:10 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 79

மேலே