காதல் கனிந்தது

ஓர் இரவில் என்னை தேடினேன்
காணவில்லை
ஆனால்
எந்தன் முழு கனவில் அவளை நாடினேன்
இன்னும் விடியவில்லை !...

வானிலிருந்து வந்த வெண்ணிலாவாய்
என் கனவில் தோன்றியவள்
என் மனதில் தேவதையாய் தங்கிவிட்டாள் !...
பாதிவாழ்க்கையை வாழ்வதை விட
என்னுள் முழுவதுமாய் வாழலாம் என்று !...

காத்திருந்தேன் அவளின் வருகைக்காக
நித்திரையை தொலைத்து
நிசப்த அலைகளாய் !...
வந்தும் நித்திரை இல்லை
அவள் நினைவுகளின்
சாரல் மழையால் !...

கனவில் கண்ட அவளை
கண்டேன் ஒரு நாள் விழியால் !...
காத்திருந்த கொக்குக்கு
கிடைத்த மீன்போல
கண்ட நொடி பொழுதே
விழுந்தேன்
கல்தடுக்கி அல்ல !...
காதலில் உருகி !...
அன்று விழுந்தவன்தான்
இன்னும் எழவில்லை
எழ முயற்சித்தும் முடியவில்லை
எல்லாமே தோல்வியில் முடிந்தது
காரணமும் தெரியவில்லை
காதலால் எதுவும் புரியவில்லை !...

நாடி சொல்லும் சொல்லை
உன் முன்னாடி சொல்ல வந்தேன்
உன் கயல்விழி பார்வையினால்
கோர்த்த சொல்லை மறந்தேன்
தினம் பேசும் தாய்மொழியை
மறக்க செய்ய
உன்னால் பெண்ணே முடிந்தது !...

காதில் சொல்ல வந்த
வார்த்தையை இழந்து
காகித பூவோடு நின்றேன் !...
காத்திருந்த தென்றல் காற்றால்
காகிதம் இன்று குப்பை ஆனது !...

சுவற்றில் சிந்திய சித்திரம் போல
மௌவுனமாய் இருந்ததாலே
மறைந்திருந்து சிரித்தாயோ !...
தூக்கம் தொலைத்த விட்டில் போல
தூரமாய் தொலைந்ததாலோ
திரைமறைவில் ரசித்தாயோ !...

வாசகம் ஒன்றை சொன்னதால்
பெண்ணே உன்னால்
உதிரும் உதிரம் நின்றது !...
யாசகம் செய்து வென்றதால்
பெண்ணே என்னுள்
உயிரும் இன்றி வாழுது !...

எழுதியவர் : பிரபாகரன் (2-Jun-14, 1:51 pm)
சேர்த்தது : பிரபாகரன் செ
பார்வை : 107

மேலே