சாதியம்
சாதியத்தை நான் கண்ட இடம் காதல்
இதை அவள் காணவில்லை அவள் சுற்றம் பார்த்தது
காதலிக்க தகுதிகள் கிடையாது என்று யார் சொன்னது
தகுதிகள் உண்டு அவை மறைமுகமாக மறைக்கபடுகிறது
அதன் முதல் தகுதி சாதியம்
பாவம் அந்த வெகுளி பெண்ணிற்கு தெரியவில்லை
காதலில் கூட சாதீயம் உண்டு என்று
பெண்ணே நீயும் சாதியம் பார்துவிடதே
அவன் சாதிப்பான என்று மட்டும் பார்
சாதியத்தை நான் என் அடையாளமாக கூட
பார்க்க விரும்பவில்லை காரணம்
சாதியமும், சாமியும் வீணர்களின்
பொழுதுபோக்காக பார்கிறேன்
நான் சாதியனாக வாழ விரும்பினால்
என்மேல் நானே எழுப்பும் கேள்விகள்
நான் உண்ணும் உணவை விதைத்தவன் என் சாதியன் அல்லவே
நான் அணியும் ஆடையை நெய்தது என் சாதியன் அல்லவே
நான் உறங்கும் உறைவிடம் கட்டியது என் சாதியன் அல்லவே
எனக்கு பாடம் கற்று கொடுத்த ஆசான் என் சாதியன் அல்லவே
என் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவச்சி என் சாதியன் அல்லவே
நான் வணங்கும் கடவுளின் சிலை வடித்தவன் என் சாதியன் அல்லவே
நான் பணிபுரியும் இடத்தில் அனைவரும் என் சாதியர்கள் அல்லவே
நான் தோல்வியடையும்போது எனக்கு தோள் கொடுத்த
தோழனும் என் உயிர் தோழியும் என் சாதியன் அல்லவே
பின் எங்கிருந்து வந்ததடா இந்த சாதீயம்
ஏதோ ஒரு குழந்தை அடிபட்டவுடன் பதறும்
தாயின் உள்ளத்தில் இல்லையாட இந்த சாதியம்
கண் தெரியாத நபருக்கு உதவி செய்யும்
குழந்தையிடம் இல்லையாட இந்த சாதியம்
அவசர காலத்தில் உதவிடும்
நண்பனிடம் இல்லையாட இந்த சாதியம்
தமிழன் மட்டுமே இன்று சாதியத்தை வைத்து தரிகெட்டு போகிறான்
சாதியத்திற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்கள் உள்ளதடா
மானிடா அது தான் "அன்பு"
இதை நீ எப்போது உணர்ந்துகொள்ள போகிறாய்